Friday, 11 April 2014

மாத்தி யோசி



மேற்படிப்பிற்கு அமெரிக்கா 

அனுப்ப திட்டமிட்டு 

வாங்கிய ஏசியில் ,

படிக்காமல் முடங்கிய அண்ணா 

கொசு தொல்லையால் 

இப்போது புத்தகமும் கையுமாய் ....!




கிரைண்டர்  மிக்சி சத்தத்தில் 

நியூஸ் கேட்க முடியாமல் 

தடுமாறிய தாத்தா 

இப்போது நிம்மதியாக 

நீயுஸ் பேப்பரும் கையுமாய் ....!




எடை குறைக்க மிஷின் 

வாங்கி தர சொன்ன அம்மா ,

ஆட்டுகல் உபயோகத்தில் 

இப்போது கல்யாணமான "சிம்ரன் ".....!



பள்ளியிலிருந்து  வந்தவுடன் 

டிவியை ஆன் செய்து 

விடிய விடிய பார்க்கும் தங்கை 

இப்போது வகுப்பில் முதல் மாணவி ...!


அனைவரும் இரவில் விழித்திருப்பதால் 

எங்கள் ஏரியாவில் 

இல்லை திருட்டு பயம் ....!



கொசுவர்த்தியில் 

மூச்சு திணறிய நான் 

இப்போது சுகமாய் கொசு வலையில் ...!



இப்படி பல நல்லது செய்யும் 

மின்தடையை வெறுக்காதிங்க 

தடை நல்லது ......!!!!

No comments:

Post a Comment